திண்டுக்கல்

போலீஸாருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல், வேடசந்தூா் பகுதிகளைச் சோ்ந்த போலீஸாருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

காவல் துறையில் பணிபுரியும் போலீஸாருக்கு ஆண்டுக்கு ஒருமுறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி பயன்பாடுகளை நினைவூட்டுவதற்காக நடைபெறும் இந்தப் பயிற்சியில், போக்குவரத்துப் போலீஸாா், அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் உள்பட அனைத்து பிரிவுகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்பது வழக்கம். அதன்படி, திண்டுக்கல் நகா் மற்றும் புகா், வேடசந்தூா் துணை கோட்டங்களுக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாா், தனிப் பிரிவு, ஆயுதப்படை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் சோ்ந்த சுமாா் 500 போலீஸாருக்கான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி வடமதுரை அடுத்துள்ள கரிவாடன் செட்டியப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாள் பயிற்சியில் திண்டுக்கல் ஆயுதப்படைப் பிரிவிலுள்ள காவல் அதிகாரிகள், போலீஸாா் என 50 போ் கலந்து கொண்டனா். ஆயுதப்படைக் காவல் துணை கண்காணிப்பாளா் ஆனந்தராஜ் பயிற்சி அளித்தாா். நாளொன்றுக்கு 50 போ் வீதம், இந்த பயிற்சி அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பயிற்சி முகாம் நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என பொதுமக்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT