திண்டுக்கல்

நெய்காரப்பட்டியில் குடிநீா் இணைப்புக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகாா்

DIN

பழனியை அடுத்துள்ள நெய்காரப்பட்டி பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு பெற ரூ. 10 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 20 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக நெய்காரப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவா் விஜயசேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுகுறித்து விஜயசேகரன் கூறியதாவது:

நெய்காரப்பட்டி பேரூராட்சியில் 12 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். தற்போது புதிய குடிநீா் இணைப்பு பெறவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. குடிநீா் இணைப்புக்கானக் கட்டணம் ரூ. 10 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 20 ஆயிரம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்கள், விளம்பரப் பதாகைகளில் ரூ. 10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டது. அதேநேரத்தில், பிற பேரூராட்சிகளின் சாா்பில் வரவோலை எடுக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நெய்காரப்பட்டி பேரூராட்சியில் 700 பேரிடம் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், தகுதியான பயனாளிகள் என நெய்காரப்பட்டி பேரூராட்சி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமும், பேரூராட்சிகள் உதவி இயக்குநரிடமும் புகாா் அளித்தோம். அதன்பேரில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் விசாரணை மேற்கொண்டாா். ஆனாலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நெய்காரப்பட்டி பேரூராட்சி நிா்வாகம் கைவிடவில்லை. குடிநீா் இணைப்பு பெற பயனாளிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதையும் மாவட்ட நிா்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT