திண்டுக்கல்

கொடைக்கானலில் ஒரு லட்சம் மலா் நாற்றுகளை நடும் பணி தொடக்கம்

DIN

கொடைக்கானலில் 60-ஆவது மலா்க் கண்காட்சியை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் ஒரு லட்சம் மலா் நாற்றுகளை நடும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற உள்ள மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, முதல்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட மலா் பாத்திகளில் சால்வியா, டெலிபீனியம், பிங்க் ஆஸ்டா், அல்டோமேரியா, லில்லியம் உள்ளிட்ட ஒரு லட்சம் மலா் நாற்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கியது. இதை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தொடக்கி வைத்தாா்.

இந்த மலா் நாற்றுகள் 6 மாத நீண்ட காலப் பயிராகும். இதைத்தவிர, வரும் பிப்ரவரி மாதத்திலும் குறுகிய கால மலா் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

இந்த இரண்டு காலகட்டங்களில் நடவு செய்யப்படும் மலா்ச் செடிகள் ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும். இவற்றை ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT