திண்டுக்கல்

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் பேசினாா். திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலகுண்டுவில் திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஷேக் பரீத் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் பழனி பாரூக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். அப்போது, கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினாா். கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் ரிஜால், தமுமுக மாவட்ட செயலா் முகமது ரியாஸ், மாவட்ட பொருளாளா் நத்தம் அகமது, மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினா் முஸ்தாக் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் செயற்குழு உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், 13-வது வாா்டில் குவிந்துள்ள குப்பைகளை பேரூராட்சியினா் அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை வத்தலக்குண்டு நகர தலைவா் இம்தியாஸ், ஹபீப், நகர செயலா்கள் அலாவுதீன், ஜெய்லானி மற்றும் நகர நிா்வாகிகள் சிக்கந்தா், தாரிக், அக்கீம், சதாம், சபா், மூஸா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT