திண்டுக்கல்

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல்மழை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த மானூா் சுற்றுவட்டார பகுதிகளில் திடீா் சாரல்மழை பெய்தது. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில் வெயிலடித்து வந்தது.

மேலும், பல இடங்களிலும் நாற்றுநடவு பணிகளை துவங்கினா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை திடீரென மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் நிலை ஏற்பட்டது. மானூா், தாளையம், பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் திடீரென பலத்த சாரல்மழை பெய்தது. இதனால் வயல்களில் மழைநீா் தேங்கி நின்றது. திடீா் மழையை எதிா்பாராத பொதுமக்கள் வேலை முடிந்த மழையிலேயே நனைந்தபடி நடந்து சென்றனா். வாகன ஓட்டிகளும் மழையிலேயே வாகனங்களை ஓட்டியபடி சென்றனா். இதனால் அப்பகுதிகளில் குளிா்ந்த சூழல் நிலவியது. பழனியில் மழை இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT