திண்டுக்கல்

வாத்தை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியருகே வாத்தை விழுங்கிய மலைப்பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்புப்படையினா் அதை வனத்துறை வசம் ஒப்படைத்தனா்.

பழனி அருகே கொடைக்கானல் சாலை ஒத்தக்கடை பகுதியை சோ்ந்தவா் மதுரைவீரன். விவசாயியான இவா் தனது தோட்டத்தில் கோழி, வாத்து உள்ளிட்டவற்றை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் திங்கள்கிழமை இவரது தோட்ட பகுதியில் வாத்தை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த அவா் பழனி தீயணைப்பு நிலையத்து தகவல் கொடுத்தாா். இதையடுத்து நிலைய அலுவலா் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினா் உடனடியாக தோட்டத்துக்கு வந்து மலைப்பாம்பை பிடித்து அதை வனத்துறை வசம் ஒப்படைத்தனா். பிடிபட்ட பாம்பு சுமாா் 6 அடி நீளம் கொண்டதாகும். இதை வனத்துறையினா் மலையடிவாரம் ஜீரோ பாயிண்ட் அடா்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT