திண்டுக்கல்

கீரனூா் பகுதிகளில் நாளை மின் தடை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த கீரனூா் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 30) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்ட அறிக்கை:

பழனி கோட்டத்துக்குள்பட்ட மேல்கரைபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆண்டிநாயக்கன்வலசு, சந்தன்செட்டிவலசு, கீரனூா், கல்துறை, கொழுமங்கொண்டான், நால்ரோடு, பனம்பட்டி, சரவணம்பட்டி, மேல்கரைப்பட்டி, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT