பழனி அருகே சாமிநாதபுரத்தில் சாயமேற்றும் தொழில் சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பழனியை அடுத்த சாமிநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நூல்களுக்கு சாயமேற்றும் தனியாா் தொழில் சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், சாயமேற்றுவதற்கான பாய்லா் பகுதியில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பழனி தீயணைப்புத் துறையினா் சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். விபத்தில் அங்கிருந்த ரசாயன கேன்கள், விறகுகள் எரிந்து சாம்பலானது.