திண்டுக்கல்

பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதா் திருக்கல்யாணம்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் திங்கள்கிழமை வருடாபிஷேகத்தையொட்டி கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில், பெரியநாயகியம்மன் கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டுகள் ஆனதையொட்டி வருடாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு யாகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கைலாசநாதா் சமேதா் பெரியநாயகியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து இரவு, நான்கு ரத வீதிகளில் பஞ்சமூா்த்தி உலா நடைபெற்றது. பூஜைகளை கோயில் தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், உபயதாரா் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT