திண்டுக்கல்

மரம் வெட்டும் தொழிலாளி ‘போக்சோ’ வழக்கில் கைது

27th Nov 2022 11:43 PM

ADVERTISEMENT

 

வத்தலகுண்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மரம் வெட்டும் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40). மரம் வெட்டும் தொழிலாளியான் இவா், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், நிலக்கோட்டை மகளிா் காவல் ஆய்வாளா் பேபி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT