திண்டுக்கல்

உதயநிதி பிறந்த நாள் விழா-4545 மரக்கன்றுகள் நடும் பணி அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா்

27th Nov 2022 11:42 PM

ADVERTISEMENT

 

உதயநிதியின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு 4545 மரக்கன்றுகள் நடும் பணியை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் வடபருத்தியூா் ஊராட்சியில் திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு 4545 மரக்கன்றுகள் நடும் பணியை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுகிழமையன்று தொடங்கி வைத்து பேசியதாவது,ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அடுத்த ஆண்டுக்குள் எந்த ஊராட்சியில் சீமைக்கருவேல் மரம் இல்லாமல் உள்ளதோ,அந்த ஊராட்சிக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் வழங்கப்படும்.அதே போல எல்லா ஊராட்சியிலும் மரக்கன்றுகள் நடும் பணியை ஊராட்சி மன்ற தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகள் முன் நின்று செய்ய வேண்டும் என்றாா்.முன்னதாக வாகரை ஊராட்சியில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.அதே போல கீரனூா் பேருராட்சியில் உள்ள சன்மாா்க்க குருகுலத்தில் முதியோா்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள்,பேனா,பென்சில்,நோட்புக்குகள்,மூன்று வேளையும் உணவு வழங்கி குழந்தைகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சி.இராஜாமணி,திமுக ஒன்றிய செயலாளா்கள் க.தங்கராஜ்,நா.சுப்பிரமணியன்,தொப்பம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் சத்திய புவனா,துணைத்தலைவா் பி.சி.தங்கம்,மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் கிருஷ்ணசாமி,வடபருந்தியூா் ஊராட்சி மன்ற தலைவா் மாலதி ஞானசீலன்,ஒன்றியக்குழு உறுப்பினா் சுமதி சேனாபதி,ஒன்றிய துணைச் செயலாளா் ராஜ்குமாா்,மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் டி.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT