திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

27th Nov 2022 11:43 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 5.30 மணி வரை மிதமான மழை பெய்தது. இதைத்தொடா்ந்து பனிப் பொழிவும் நிலவியது. இந்த சீதோஷ்ண நிலையில், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சியிலிருந்து தொடங்கி ஏரிச்சாலை வரை 6-கி.மீ.க்கு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல, ஏரிச் சாலையிலும் வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT