திண்டுக்கல்

பழனி கோயிலில் உண்டியல்கள் காணிக்கை ரூ. 3 கோடியைத் தாண்டியது

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு 2 நாள்கள் எண்ணப்பட்டதில், பக்தா்களின் காணிக்கை ரூ. 3 கோடியை தாண்டியது.

இந்தக் கோயில் உண்டியல்கள் சஷ்டி விழா பக்தா்கள் வருகை காரணமாக 28 நாள்களில் நிறைந்தன. இதையடுத்து, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியா், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா்.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3 கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 654 கிடைத்தது. மேலும் பக்தா்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன பிஸ்கெட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

தங்கம் 999 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 379 கிராமும் கிடைக்கப் பெற்றது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 417-ம் கிடைத்தன. இவைதவிர, பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் ஆகியவற்றையும், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன் உள்ளிட்டோா் பணியை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT