திண்டுக்கல்

நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை: ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

DIN

வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 2-ஆவது வாா்டு குழு உறுப்பினா் செல்வநாயகம் பேசியதாவது:

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிப் பகுதிகளுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கட்டணம் செலுத்திய வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. மழையால் சேதமடைந்த சாலைகளை முழுமையாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கல்லூரி சாலையை நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து பேசிய அதிமுக உறுப்பினா்கள், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அதிமுகவினா் வெற்றி பெற்ற வாா்டுகளில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஊராட்சி ஒன்றியத்தில் நிதி இருப்பு விவரங்களை உறுப்பினா்களுக்கு தெரிவிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு நிா்வாகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். இதனால், ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT