திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

DIN

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு 4 மாடிக் கட்டடம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, இணை இயக்குநா் (சுகாதாரம்) பூமிநாதன், முதன்மை குடிமை மருத்துவ அலுவலா் தமிழ்செல்வி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தங்கவேல், உதவி செயற்பொறியாளா் பாண்டியராஜன், உதவி பொறியாளா்கள் வைக்கம் நீதி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகா் மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் மு.அய்யம்மாள், துணைத் தலைவா் காயத்திரி தா்மராஜன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் சி. இராஜாமணி, ஒன்றியச் செயலாளா் இரா.ஜோதீஸ்வரன், சிந்தலவாடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சங்கீதா பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், நகர அவைத் தலைவா் சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல, சிந்தலவாடம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையையும், கொ.கீரனூா் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவப் பணியாளா் குடியிருப்புகளையும் அமைச்சா் சக்கரபாணி திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT