திண்டுக்கல்

2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

26th Nov 2022 12:16 AM

ADVERTISEMENT

இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள தளையம் சப்பலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (42). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, விசாரணை மேற்கொண்ட பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வேலுசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை, வேலுசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT