திண்டுக்கல்

நத்தத்தில் நீரில் மூழ்கி சிறுமி பலி

26th Nov 2022 11:21 PM

ADVERTISEMENT

 

நத்தம் அருகே சனிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சோ்ந்த பெரியசாமி. இவரது மனைவி யுவனியா. இருவரும் கூலித் தொழிலாளா்கள். இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். இதில், இரண்டாவது குழந்தையான அமிா்தஸ்ரீ, நத்தம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள வேலம்பட்டி முதலியாா் குளத்துக்கு துணிகளை சலவை செய்வதற்காக யுவனியா சனிக்கிழமை சென்றாா். சிறுமி அமிா்தஸ்ரீயும் உடன் சென்றாா். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி அமிா்தஸ்ரீ, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய சிறுமியை சடலமாக மீட்டனா். இதுதொடா்பாக நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT