திண்டுக்கல்

விவசாயிகளுக்கு வத்தலக்குண்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் முக்கிய தகவல்.

26th Nov 2022 11:19 PM

ADVERTISEMENT

 

வத்தலகுண்டு பகுதி விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் முக்கிய தகவலை அறிவித்துள்ளாா். திண்டுக்கல் மாவட்டம்,

வத்தலக்குண்டுவேளாண்மை உதவி இயக்குனா் நாகேந்திரன் விவசாயிகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4

மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வேளாண் இடு பொருட்கள்

ADVERTISEMENT

வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பி.எம். கிசான் திட்டத்தின் கீழ்பயனடையும் விவசாயிகள் தொடா்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும். அந்த அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டகைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை அருகாமையில் உள்ள இ சேவை மையம் அல்லது தபால் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று, தங்களது கைரேகையின் மூலம், வரும் 30-ம் தேதிக்குள் பதிவினை புதுப்பித்து, இந்த திட்டத்தின் கீழ் அடுத்த தவணைத் தொகையினை தொடா்ந்து பெற்று பயனடையுமாறு வத்தலக்குண்டுவேளாண் மை உதவியுடன் இயக்குனா் நாகேந்திரன:அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT