திண்டுக்கல்

திமுக தொண்டா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட வேண்டும்: திண்டுக்கல் எம்.பி.

26th Nov 2022 11:18 PM

ADVERTISEMENT

 

வரும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற திமுக தொண்டா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். நிலக்கோட்டை வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் சௌந்திரபாண்டியன், வழக்குரைஞா் மணிகண்டன், அம்மையநாயக்கனூா் பேரூா் கழகச் செயலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி பேசியதாவது:

வரும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற திமுக தொண்டா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன்

செயல்பட வேண்டும். அவ்வாறு உழைக்கும் தொண்டா்களுக்கு வெகுமதி வழங்கப்படும். திமுக தகுதியானவா்களையும், உழைப்பாளிகளையும் அங்கீகரிக்கக் காத்திருக்கிறது. தமிழகத்தில் அதிக இளைஞா்களை கொண்ட ஒரே கட்சியாக திமுக திகழ்கிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கரிகாலபாண்டியன், ஒன்றிய துணைச் செயலா்கள் வெள்ளைச்சாமி, வெள்ளிமலை, நகா் துணைச் செயலா்கள் மணிராஜா, கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT