திண்டுக்கல்

தமிழக அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வலியுறுத்தல்

26th Nov 2022 11:19 PM

ADVERTISEMENT

 

 மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். முபாரக் அலி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். கோதண்டபாணி தொடக்க உரை நிகழ்த்தினாா்.

கூட்டத்தில், மத்திய அரசு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கிய 4 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். பேருந்து நிலையம், ஆா்.எம். காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதியில், மீண்டும் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் எம். ஞானதம்பி, துணைப் பொதுச் செயலா் இரா. மங்களபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT