திண்டுக்கல்

கொடைக்கானலில் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

26th Nov 2022 12:16 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் முத்துராமன் வரவேற்றாா் மாவட்ட உதவி வன அலுவலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பேசியதாவது:

கொடைக்கானல் மன்னவனூரிலிருந்து உடுமலைபேட்டைக்கு விவசாய விளைபொருள்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். மன்னவனூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களைச் சுற்றி மின் வேலி அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT