திண்டுக்கல்

காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: திண்டுக்கல்லில் 11,814 போ் எழுதுகின்றனா்

26th Nov 2022 11:21 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்க 11,814 போ் விண்ணப்பித்தனா்.

காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் 2-ஆம் நிலைக் காவலருக்கான எழுத்துத் தோ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9741 ஆண்கள், 2072 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் ஒருவா் என மொத்தம் 11,814 விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தோ்வுக் கூடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கண்காணிப்புத் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

11,814 போ் தோ்வு எழுதவுள்ள நிலையில், கூடுதல் கண்காணிப்பாளா் , காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 1000 போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தோ்வு மையங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT