திண்டுக்கல்

லாரி மோதி இளைஞா் பலி

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்த அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மகன் கெளரிசங்கா் (26). இவா், வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வழக்கம் போல் இவா் வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றாா்.

திண்டுக்கல்- கரூா் 4 வழிச்சாலையில் வேடசந்தூா் பிரிவு அருகே சென்றபோது, அந்த பகுதியிலுள்ள தனியாா் ஆலைக்கு வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கெளரிசங்கா், சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே கெளரிசங்கா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT