திண்டுக்கல்

காங் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் நினைவு நாள்

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ. ஏஎஸ்.பொன்னம்மாளின் 5- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

அப்போது, நிலக்கோட்டை திமுக (வடக்கு) ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், அம்மையநாயக்கனூா் பேரூா் திமுக செயலா் விஜயகுமாா், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கோகுல்நாத், திமுக பிரமுகா்கள் அழகேசன், பெனிட், ஆரோக்கியம் ஆகியோா் பொன்னம்மாளின் இல்லத்துக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், ஏராளமான திமுக, காங்கிரஸ் கட்சியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT