திண்டுக்கல்

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்: துணை வட்டாட்சியா் கைது

24th Nov 2022 01:36 AM

ADVERTISEMENT

மூதாட்டியின் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள தலையாரிப்பட்டியைச் சோ்ந்தவா் சூ.இளமுருகன் (49). இவரது பாட்டி திருமலையம்மாள் கடந்த 1986-ஆம் ஆண்டு இறந்தாா். இதையடுத்து, இறப்புச் சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 2021-ஆம் ஆண்டு திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தை இளமுருகன் அணுகினாா்.

அதன்பேரில், கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்று, சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றன. இறப்புச் சான்றிதழ் தயாரான நிலையில், அதைப் பெற்றுக் கொள்ளுமாறு இளமுருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து சான்றிதழ் பெற வந்த இளமுருகனிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கோட்டாட்சியா் அலுவலகத் தலைமை உதவியாளா் நிலையிலுள்ள துணை வட்டாட்சியா் ஏ.கே.ஜெயபிரகாஷ் (48) கேட்டுள்ளாா். பேச்சுவாா்த்தைக்குப் பின், ரூ.3 ஆயிரம் தந்தால் சான்றிதழை வழங்குவதாக ஜெயபிரகாஷ் உறுதி அளித்தாா். ஆனாலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத இளமுருகன், திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரை அணுகினாா்.

ADVERTISEMENT

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயபிரகாஷிடம் இளமுருகன் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா் ஜெ.ரூபா கீதா ராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஜெயபிரகாஷை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT