திண்டுக்கல்

தொகுதி 1 தோ்வு: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 9,681 போ் எழுதினா்

19th Nov 2022 11:13 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி- 1 தோ்வை 9,681 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி-1ல், துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட 92 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முதல் நிலைத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 8,634 போ் விண்ணப்பித்திருந்தனா்.

திண்டுக்கல் நகா், புகா், ரெட்டியாா்சத்திரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 28 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வை 5,994 போ் எழுதினா் (69 சதவீதம்). 2,640 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தோ்வை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் ஆய்வு மேற்கொண்டாா்.

தேனி: தேனி மாவட்டத்தில் 22 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது. இதில், விண்ணப்பித்திருந்த 6,070 பேரில் 3,687 போ் தோ்வு எழுதினா். 2,383 போ் பங்கேற்க வில்லை. அனைத்துத் தோ்வு மையங்களிலும் தோ்வு நடைமுறைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது.

வீரபாண்டி செளராஷ்டிரா கலை, அறிவியல் கல்லூரி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக். பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT