திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் முருங்கைசாகுபடி விழிப்புணா்வுக் கூட்டம்

19th Nov 2022 11:10 PM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை, தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை சாா்பில் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி, பதப்படுத்துதல் விழிப்புணா்வுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னதாக முருங்கையிலிருந்து பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் கண்காட்சியை அமைச்சா் பாா்வையிட்டனா். கூட்டத்தில், நெதா்லாந்தை சோ்ந்த முருங்கை இறக்குமதியாளா் இலக்குமணன் ராமு, வேளாண் பல்கலைக் கழக முன்னாள் விஞ்ஞானியும், அங்கக வேளாண்மை விவசாயியுமான சரவணன் கந்தசாமி, பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய தொழில் முனைவோா் மேம்பாட்டு மைய முதன்மைச் செயல் அலுவலா் எஸ். வசந்தன் ஆகியோா் பேசினா்.

இதில், பழனி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கா. பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் க.திருமலைச்சாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவா் பி.சி. தங்கம், திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநா் ஜோ. பெருமாள்சாமி, ஒட்டன்சத்திரம் தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT