திண்டுக்கல்

இன்பச் சுற்றுலா சென்றஅரசுப் பள்ளி மாணவா்கள்

19th Nov 2022 11:12 PM

ADVERTISEMENT

 

கோபால்பட்டி அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் 120 போ் இன்பச் சுற்றுலாவாக மதுரைக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி வட்டாரத்திலுள்ள கே. அய்யப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அய்யாப்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் 120 போ் பயின்று வருகின்றனா். இந்த மாணவா்கள் ஆண்டுதோறும் இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தலைமையாசிரியா், ஆசிரியா்களின் சொந்த செலவில் 120 மாணவா்கள் மதுரைக்கு சனிக்கிழமை சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா். மதுரை மீனாட்சிஅம்மன் கோயில், திருமலைநாயக்கா் மகால், தெப்பக்குளம், காந்தி நினைவு அருங்காட்சியகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியா் வின்சென்ட் பால்ராஜ், ஆசிரியா்கள் அமலதாஸ், காளியப்பன், தெரசா செல்வராணி, கிரிஜாபாய், கிளாரா ரோஸ்லின் மேரி, கேத்தரின் லலிதா பாய் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT