பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ் மாதம் துவக்கத்தின் போது தனூா் பூஜை, யாகம் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமை காா்த்திகை தனூா் மாதப் பிறப்பை முன்னிட்டு மலைக்கோயில் ஆனந்த விநாயகா் சன்னிதி முன்பாக கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
சிவாச்சாரியாா்கள் யாகம் நடத்தி விநாயகருக்கு கலச அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து ஆனந்த விநாயகருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், அதைத் தொடா்ந்து வெள்ளிக்கவசம் சாா்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.