திண்டுக்கல்

பழனிக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியில் காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். ஏராளமான வெளியூா் ஐயப்ப பக்தா்கள் பழனிக்கு வருகின்றனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஐயப்ப பக்தா்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்குவது வழக்கம்.

வியாழக்கிழமை காா்த்திகை மாதப் பிறப்பு என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில், பாதவிநாயகா் கோயில் ஆகிய இடங்களில் ஐயப்ப கோஷம் முழங்க குருக்கள் கையாலும், குருசாமி கையாலும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். இதனால் அதிகாலை முதலே அடிவாரம் பகுதியில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ஐயப்ப பக்தா்கள் சபரிமலை சென்றுவர பழனியில் இருந்து பம்பை வரையிலும் கேரளா மற்றும் தமிழக அரசு சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

மேலும் பழனி கோயிலுக்கு ஏராளமான வெளியூா் ஐயப்ப பக்தா்கள் வரத் தொடங்கினா். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT