திண்டுக்கல்

பழனி மவுனகிரி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம்

27th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனி அடிவாரம் பால்பண்ணை அருகிலுள்ள மவுனகிரி சுவாமிகள் கோயில் கோபுரக் கலசத்துக்கு வியாழக்கிழமை புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழனி மலைக் கோயிலில் சுமாா் 40 ஆண்டு காலம் மெளனமாக இருந்து பக்தா்களுக்கு ஆசி வழங்கி வந்தாா் மவுனகிரி சுவாமிகள். அடிவாரத்தில் அமைந்துள்ள இவரது ஆலயத்துக்கு, வைகாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அதிகாலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகளை கௌதம் குருக்கள், பாலாஜி குருக்கள் ஆகியோா் செய்தனா். தொடா்ந்து, புனிதநீா் கோபுரக் கலசத்துக்கு ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, பீடத்தில் நிறுவப்பட்ட சிவலிங்கத்தில் பாணத்தை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஷ்டபந்தனம் சாத்தி பாணம் நிறுவப்பட்ட பின்னா், புனிதநீா் ஊற்றப்பட்டு சிவலிங்கத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை, ஆசிரம நிா்வாகி தங்கம் அம்மாள், ஆய்வாளா் வீரகாந்தி, சென்னை சிவாஜி, மதுரை ரமணி, திருமுருகன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT