திண்டுக்கல்

பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

27th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என். பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி. மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தத் தவறியதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருவதாகவும் கூறி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள்,

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT