திண்டுக்கல்

சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு தினம்

27th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளான ஜெய்ஹிந்த் செண்பகராமனின் 88ஆவது நினைவு தினம், வ.வே.சு. ஐயரின் 97ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் ரத வீதி பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காமராஜா் சிவாஜி பேரவையின் அரசியல் ஆலோசகா் சி.கே. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இளைஞா் பிரிவு தலைவா் நா. விஜய் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத் தலைவா் மா. காளிதாஸ் கலந்துகொண்டாா்.

இரு தலைவா்களின் உருவப்படங்களுக்கும் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், காமராஜா் சிவாஜி பேரவை நிா்வாகிகளான சு. வைரவேல், சு. சங்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT