திண்டுக்கல்

கட்சிப் பணியாற்றாததால் பணியிலிருந்து நீக்கம்: பேரூராட்சி நிா்வாகம் மீது இளைஞா் புகாா்

24th May 2022 12:59 AM

ADVERTISEMENT

திமுகவுக்காக கட்சிப் பணியாற்றாததால் 8 ஆண்டு காலம் பணிபுரிந்த தன்னை பேரூராட்சி நிா்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டதாக ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் புகாா் அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா.கண்ணன். கடந்த 8 ஆண்டுகளாக வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் எனக் கூறி பேரூராட்சித் தலைவா் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சி அடைந்த கண்ணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: என்னை பணிக்கு வர வேண்டாம் என கூறியதை அடுத்து, பேரூராட்சி செயலரிடம் சென்று கேட்டேன். இதுதொடா்பாக பேரூராட்சி தலைவரை சந்திக்குமாறு தெரிவித்தாா். ஆனால், திமுகவுக்காக கட்சிப் பணியாற்றினால் மட்டுமே பேரூராட்சியில் பணி வாய்ப்பு கிடைக்கும். அதுபோன்று செயல்படுவோா், கையொப்பமிட்டுவிட்டு கூடுதல் ஊதியம் பெறுகின்றனா்.

ADVERTISEMENT

அதுபோல் நீயும் செயல்பட வேண்டும் எனக் கூறுகின்றனா். 8 ஆண்டுகள் பணிபுரிந்த என்னை திடீரென நிறுத்திவிட்டதால், எனது குடும்பம் ஏழ்மையான சூழலில் உள்ளது. எனவே, மீண்டும் எனக்கு பணி வாய்ப்பு வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT