திண்டுக்கல்

பழனியில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

24th May 2022 12:59 AM

ADVERTISEMENT

பழனியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 8 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் திருடுபோனது குறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி குபேரபட்டினத்தைச் சோ்ந்தவா் பொன்ராம். நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் உறவினா்கள் வீட்டுக்கு சென்றுள்ளாா். இதையறிந்த மா்மநபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.50,000-த்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT