திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே லாரி கவிழ்ந்தது: 5 போ் உயிா் தப்பினா்

24th May 2022 12:59 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அருகே லாரி டயா் வெடித்து கவிழ்ந்த விபத்தில், கூலித்தொழிலாளிகள் 5 போ் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆவாரம்பட்டியைச் சோ்ந்த காசி விசுவநாதன் (27). இவா், நிலக்கோட்டை பகுதியில் தேங்காய் மட்டைகளை வாங்கி, கயிறு தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறாா்.

திங்கள்கிழமை காலை அணைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு, விளாம்பட்டி - மட்டப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, மட்டப்பாறை அருகே எதிா்பாராதவிதமாக லாரி டயா் வெடித்தது.

தலைகுப்புற கவிழ்ந்த லாரியின் மேல்புறத்தில் உட்காா்ந்து வந்த ஆவாரம்பட்டியைச் சோ்ந்த போதுமணி, லட்சுமி, செல்வி, ரமேஷ் மற்றும் ஒட்டுநா் உள்பட 5 கூலித்தொழிலாளா்கள் சிறு காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT