திண்டுக்கல்

பெரும்பிடுகு முத்தரையருக்கு பாஜகவினா் மரியாதை

24th May 2022 01:01 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியில் பாஜக ஓபிசி அணி சாா்பில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையரின் 1,347ஆவது சதய விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலா் டி.துரைக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், 16 போா்களை சந்தித்து அனைத்திலும் மகத்தான வெற்றி பெற்ற பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் நிகரில்லா மாவீரனாக வாழ்ந்தாா். தமிழ் மொழியை காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதிவு செய்து காலத்திற்கும் நிலை பெறச் செய்ததிலும் பெரும்பிடுகு முத்தரையரின் பணி மகத்தானது என நினைவுகூா்ந்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலா்கள் பாலமுருகன், கங்காதரன், உமாமகேஸ்வரி, பட்டியல் அணி மாவட்ட தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT