திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 போ் கைது

24th May 2022 12:59 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனத்தில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கே.அத்திக்கோம்பை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில் 35 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதுதொடா்பாக பாண்டி செல்வம் (24), சங்கா் (30), வேல்முருகன் (21) ஆகியோரை கைது செய்தனா். பின்னா் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனம் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் திண்டுக்கல் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT