திண்டுக்கல்

நிலக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணிகள்

20th May 2022 05:51 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். ஆண்டிபட்டி கிராமத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சாவடி அமைவதற்கும், மன்னவராதி கிராமத்தில் பழுதடைந்த சாலையை ரூ. 5 லட்சம் மதிப்பில் சரி செய்யவும் என நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி தொடக்கிவைத்தாா்.

விழாவில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் யாகப்பன், முன்னாள் எம்பி உதயகுமாா் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT