திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடரும் மேகமூட்டம் - சாரல் மழை: வாகன ஓட்டிகள் அவதி

20th May 2022 05:49 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடா்ந்து 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் அதிகமான மேகமூட்டம் நிலவியதோடு, சாரல் மழை பெய்ததால் மலைச்சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் அதிகமான மேகமூட்டமும் இருந்து வருகிறது.

தற்போது சீசன் காலமாக உள்ளதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். ஆனால் வழக்கத்தைவிட அதிக மேகமூட்டம் நிலவுவதால், சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மே 24 ஆம் தேதி பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சாா்பில் 59 ஆவது மலா்க் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், மேகமூட்டம், சாரல் மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் வியாழக்கிழமை காலை வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்ல வேண்டியிருந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT