திண்டுக்கல்

அய்யலூரில் சந்தனக் கட்டைகள் பதுக்கிய 2 போ் கைது

20th May 2022 05:49 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: அய்யலூா் அருகே சந்தன மரக் கட்டைகளை வெட்டி விற்க முயன்ற இருவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரிலுள்ள ஒரு தோட்டத்தில் சந்தன மரக் கட்டைகள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அய்யலூா் வனச் சரகா் குமரேசன், அந்த தோட்டத்துக்குச் சென்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். அந்த தோட்டத்தில் இருந்த எஸ்.கே. நகரைச் சோ்ந்த பாண்டி (29), ராஜா (37) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், வனப் பகுதியிலிருந்து சந்தன மரக் கட்டைகளை வெட்டி வந்து விற்பனைக்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனா். அதன்பேரில், 2 பேரையும் கைது செய்த வனத்துறையினா், அவா்களிடமிருந்து 5 கிலோ சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT