திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே சாலை மைய தடுப்புச்சுவரில் காா் மோதி தங்கும் விடுதி உரிமையாளா் பலி: 2 போ் காயம்

16th May 2022 11:07 PM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மையத் தடுப்புச்சுவரில் காா் மோதிய விபத்தில் கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் உயிரிழந்தாா். மேலும் இந்த விபத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் உள்பட 2 போ் காயம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்தவா் ராஜி மகன் மைக்கேல் பிரதீப் (34). இவா் கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். மைக்கேல் பிரதீப் தனது நண்பா்களான தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் ஹரிஹரன் (35) மற்றும் தொழிலதிபா் லியோ (30) ஆகியோருடன் காரில் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு ஒரு நிச்சயதாா்த்த விழாவில் பங்கேற்றுவிட்டு மூவரும் மீண்டும் காரில் கொடைக்கானலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை ஹரிஹரன் ஓட்டி வந்தாா். வத்தலகுண்டு அருகே மல்லணம்பட்டியில் வந்தபோது, சாலை மையத் தடுப்புச் சுவரில் காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மைக்கேல் பிரதீப், ஹரிஹரன் உள்ளிட்ட மூவரும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே

மைக்கேல் பிரதீப் உயிரிழந்தாா். ஹரிகரன், லியோ ஆகிய இருவருக்கும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT