திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

16th May 2022 11:08 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் திங்கட்கிழமை மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்

கொடைக்கானலில் தற்போது சீசன் காலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது இந் நிலையில் கொடைக்கானலில் மிதமான வெயிலும் அவ்வப்போது சாரலும் சில சமயங்களில் மழைபெய்து வருவதால் குளுமையான சீதோஷன நிலை நிலவுகிறது.

இந்நிலையில் காலை முதல் மிதமான வெயில் நிலவியது மதியம் திடீரெனமழை பெய்தது இந்த மழையானது கொடைக்கானல்,பாம்பாா்புரம்,நாயுடுபுரம், செண்பகனூா்,அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 40-நி மிடம் மிதமான மழை பெய்தது.அதன் பிறகு தொடா்ந்து மேக மூட்டமும் அவ்வப்போது லேசான சாரலும் நிலவியது இந்த குளுமையான சீதோஷன நிலையில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பாா்த்து ரசித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT