திண்டுக்கல்

கொடைக்கானலில் புனித பாத்திமா மாதா மின் அலங்கார சப்பர பவனி

16th May 2022 12:17 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் புனித பாத்திமா மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மாதாவின் மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு நிகழ்ச்சியாக ஆலயத்தில் சனிக்கிழமை பங்குத் தந்தை எட்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது. பின்னா் புனித பாத்திமா மாதாவின் மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.

ADVERTISEMENT

பில்டிங் சொசைட்டி, எம்.எம்.தெரு, தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பவனி நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் பாத்திமா மாதாவின் சுருப பவனியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT