நிலக்கோட்டை: செம்பட்டி அருகே புதன்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், வியாபாரி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரத்தை சோ்ந்தவா் செல்லமாயி (45). இவரது மனைவி முத்துலட்சுமி (40). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.
பழம் வியாபாரியான செல்லமாயி, பழங்கள் வாங்குவதற்காக புதன்கிழமை மாலை காமுபிள்ளைசத்திரத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். செம்பட்டியை அடுத்த சுதனாயகிபுரம் என்ற பகுதியில் இவரது இருசக்கர வாகனத்தின் மீது குமுளி நோக்கி சென்ற காா் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செல்லமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து, செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.