திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

2nd May 2022 11:09 PM

ADVERTISEMENT

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி கீழத் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (45). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பசுபதி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், கேசவனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட இவா், மனம் உடைந்து வீட்டிலிருந்த தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். உடனே, அவரை உறவினா்கள் மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே கேசவன் உயிரிழந்துவிட்டாா்.

எனவே, மீண்டும் அவரது உடல் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து அவரது மனைவி பசுபதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT