திண்டுக்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு: திமுக தொண்டா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

1st May 2022 10:48 PM

ADVERTISEMENT

 

செம்பட்டியில் முதல்வா் வரவேற்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த திமுக தொண்டா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் ரூ.5 லட்சத்திற்கான நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பங்கேற்றாா். இதில் பங்கேற்க தேனியிலிருந்து திண்டுக்கல் வந்த முதல்வருக்கு, செம்பட்டியில் திமுக தொண்டா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்காக நிலக்கோட்டை அடுத்துள்ள குல்லலக்குண்டு ஊராட்சிக்குள்பட்ட கல்லடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த திமுக தொண்டரும், கூலித் தொழிலாளியுமான ஆரோக்கியசாமி(60), தனது மனைவி ஆரோக்கியமேரியுடன் கலந்து கொண்டாா். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், முதல்வா் புறப்பட்டுச் செல்லும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஆரோக்கியசாமியின் குடும்பத்தினருக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா். பின்னா் திமுக சாா்பில் ரூ.5 லட்சத்திற்கான நிதி உதவியை ஆரோக்கியசாமியின் குடும்பத்தினரிடம் செந்தில்குமாா் வழங்கினாா். அப்போது திமுக துணைச் செயலா் நாகராஜன், மாநகராட்சியின் தெற்கு மண்டலத் தலைவா் பிலால் உசேன் உள்பட அக்கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT