திண்டுக்கல்

பழைய தாராபுரம் சாலை விரிவாக்கம்

25th Mar 2022 09:57 PM

ADVERTISEMENT

பழனி பழைய தாராபுரம் சாலை ரூ. 3 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், நரிக்கல்பட்டி கிராமத்திலிருந்து கோரிக்கடவு வரையில் 5 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வெள்ளிக்கிழமை உதவிப் பொறியாளா் ஜெயபால் மற்றும் பொறியாளா்கள் ஆய்வு செய்தனா். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பழனி பழைய தாராபுரம் சாலை விபத்தில்லா சாலையாக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த பணியை செய்து வருகிறது. பழனி முருகன் கோயிலில் நடைபெறக்கூடிய தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்காக கொங்கு மண்டலத்தில் இருந்து பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தா்கள் இச்சாலையை பயன்படுத்தி பழனி வந்து அடைவா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT