திண்டுக்கல்

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

25th Mar 2022 06:23 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீா்நிலைகளில் இருந்த தனியாா் ஆக்கிரமிப்புகளை, வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வியாழக்கிழமை அகற்றினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீா்நிலைகளில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளா்களே அகற்றிக் கொள்ள வருவாய்த் துறையினா் தொடா்ந்து அறிவுறுத்தி வந்தனா். இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில், உடனடியாக வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்பேரில், பழனி, ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை, பழனி சாா்-ஆட்சியா் சிவகுமாா் தலைமையில் வட்டாட்சியா் சசி, துணை வட்டாட்சியா் சஞ்சய்காந்தி மற்றும் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு அகற்றினா்.

ADVERTISEMENT

நகரின் மையப் பகுதியில் பழனி வையாபுரிகுளம் கரையில் ஆக்கிரமித்து மதுபானக் கூடம் செயல்பட்டு வந்த நிலையில், அதை வருவாய்த் துறையினா் அகற்றினா். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT