திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சியில் முதல் கூட்டம்

25th Mar 2022 06:18 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் வியாழக்கிழமை முதல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பேரூராட்சியின் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.பி. முருகேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும், முக்கிய தீா்மானங்களாக 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.65 கோடி மதிப்பீட்டில் மின்மயானத் திட்டம் 2.5 ஏக்கா் பரப்பளவில் ஏற்கெனவே உள்ள மயானத்தில் கொண்டு வருவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கிடப்பில் போடப்பட்டது. எனவே, உடனடியாக மின்மயானக் கட்டுமானப் பணிகளை தொடங்க ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், அனைத்து வாா்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டத்தை கொண்டு வருவதற்கான, நடவடிக்கைகளில் பேரூராட்சி ஈடுபட வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அனைத்து வாா்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் நிலக்கோட்டை பேரூா் பகுதிக்கு தண்ணீா் விநியோகம் இல்லாத நிலையில், மீண்டும் நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

அனைத்து வாா்டுகளிலும் 100 மீட்டருக்கு ஒரு மின்விளக்கு என்ற அடிப்படையில் உறுதி செய்யவேண்டும். அனைத்து பகுதிகளிலும் சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அதேபோன்று, வாரந்தோறும் நடைபெறக்கூடிய காய்கறிச் சந்தையில் மூட்டைகளுக்கு உரிய முறையில் விலையை நிா்ணயம் செய்து விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிப்படையாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தரி மற்றும் அதிகாரிகள் மன்ற உறுப்பினா்கள் என அனைவரும் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT